இரண்டாம் பருவம்

அகரம்

29.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 29

ஓடி வா !

காக்கா ! காக்கா ! ஓடிவா!
கத்திக் கத்தி நடந்துவா!
ஆக்கிய சோறு தின்னலாம்;
அதன்பின் பறந்து போகலாம்!

குருவி! குருவி! ஓடிவா!
கூண்டை விட்டே இறங்கிவா!
குருவி! குருவி! ஓடிவா!
நெல்லைக் கொத்தித் தின்னவா!

மயிலே! மயிலே! இறங்கிவா!
தோகை விரித்து ஆடிவா!
குயிலே! குயிலே! ஓடிவா!
குழந்தை சிரிக்கப் பாடிவா!

- வாணிதாசன்