இரண்டாம் பருவம்

அகரம்

29.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 29

கழுகு

மகள் : அப்பா ! வானத்தைப் பாருங்கள் மிக உயரத்தில் ஒரு பறவை!
தந்தை : ஓ! அந்தப் பறவையா?
மகள்: ஆமாம், அப்பா. அதன் பெயர் என்ன?
தந்தை: கழுகு. அது கொன்றுண்ணிப் பறவை.
மகள் : கொன்றுண்ணியா?
தந்தை : ஆம் மகளே! எலி, கோழிக்குஞ்சு போன்றவற்றைக் கொன்று உண்ணும்.
மகள்: இந்தப் பறவை எங்கே வாழும்?
தந்தை: உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டு வாழும்.
மகள்: சரி அப்பா! இப்போது ஏன் இங்குச் சுற்றுகிறது?
அப்பா : அது, தனக்கான இரையைத் தேடுகிறது.
மகள்: ஓ, அப்படியா! வானில் மிக உயரத்தில் இருக்கும்போது அதற்குக் கண் தெரியுமா?
அப்பா : ஆமாம், நன்றாகத் தெரியும். கழுகின் கண்பார்வை மிகக் கூர்மையானது.