இரண்டாம் பருவம்

அகரம்

29.2.1 அறிவோம்

பாடம் - 29

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை உருபுகளுள் ஐ, ஆல், கு ஆகியவற்றை முதல் பருவத்தில் அறிந்துகொண்டோம். அவற்றுடன் இன், அது, கண் ஆகியவற்றையும் அறிந்து கொள்வோம்.

கண்ணன் திருக்குறளைப் படித்தான்
கத்தியால் காய்களை நறுக்கினான்
செங்கல்லால் வீடு கட்டலாம்
பூனைக்குப் பயந்து எலி ஓடியது
பாலின் நிறம் கொக்கு
மலையின் வீழருவி
செல்வத்தில் சிறந்தது கல்வி
வேலனது புத்தகம்
இது நண்பனது வீடு
பறவையது கூட்டம்
யானையினது தந்தம்
மணியின்கண் ஒலி
கையின்கண் விரல்
மரத்தின்கண் மயில்