இரண்டாம் பருவம்

அகரம்

30.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 30

காடு

முட்புதர் நெருஞ்சி கள்ளி

முன்னரண், ஒற்றைப்பாட்டை
உட்புகும் வாயில், தூண்கள்

உயர்மரம், அம்ம ரத்துக்
கொத்துப்பூ காற்றி லாடும்

கொடிகளாம், வெய்யோன் திங்கள்
உட்புக வொண்ணாத் தூய

மரகதக் கோட்டை காடே!

- வாணிதாசன்

பொருளறிவோம்

ஒற்றைப்பாட்டை - ஒற்றைப்பாதை
வெய்யோன் - சூரியன்
திங்கள் - நிலா