இரண்டாம் பருவம்

அகரம்

30.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 30

பனைமரம்

தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம். இது புல் இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர வகை. இதில் ஆண்பனை, பெண்பனை என்ற வகைகள் உண்டு. பனைமரத்திலிருந்து நுங்கு என்னும் உணவுப்பொருள் கிடைக்கிறது. நுங்கு உடலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கிறது. மேலும், பனை மரத்திலிருந்து பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் போன்ற உணவுப் பொருள்களும் கிடைக்கின்றன. இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன. உடல் வெப்பத்தைப் போக்குகின்றன. இம்மரம் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக்கொள்கிறது. மேலும், இதன் அனைத்துப் பகுதிகளும் பயன்தருகின்றன.