இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.4 தெரிந்துகொள்வோம்

இடைச்சொற்கள்

உம் பெட்டியில் ஆரஞ்சும், கொய்யாவும், திராட்சையும், ஆப்பிளும், அன்னாசியும் இருந்தன.
அது மரத்தினது இலைகள் வீட்டின்மேல் படர்ந்திருந்தன.
முன் மாறனுக்கு முன்னால் நாய் ஓடியது.
பின் கதவிற்குப் பின்னால் பூனை இருந்தது.
கண் குரங்கு மரத்தின் கண் தாவியது.
ஆல் மரத்தினால் செய்யப்பட்ட மேசையின் கீழே பொம்மை இருந்தது.
என சாரதா கலகல வெனச் சிரித்தாள்.
போல் முகிலனைப் போல் கவின் இருந்தான்.
இருந்து அப்பா வீட்டிலிருந்து சென்றார்.
ஆறு ஆசிரியர் நன்கு புரியுமாறு பாடத்தை விளக்கிக் கூறினார்.
என்று அண்ணனுடன் நான் விறுவிறுவென்று நடந்தேன்.
கு உழவர் வயலுக்கு நீர் பாய்ச்சினார்.

தனித்து நிற்காது பெயரையோ வினையையோ சார்ந்து வரும் சொல் இடைச்சொல்