இகரம்
(முதல் பருவம்)
தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகமாய் விளங்குவது, புறநானூறு என்னும் நூல். இந்நூலில் மக்களின் வாழ்க்கைமுறை, அரசர்களின் ஆட்சிமுறை, போர் பற்றிய செய்திகள் உள்ளன. போர் நடைபெறும்போது ஆண்களும் பெண்களும் வீரத்துடன் எதிர்த்து நின்றனர். ஒரு பெண், முதல் நாள் போரில் தன் தந்தையை இழந்தாள். மறுநாள் போரில் தன் கணவனையும் இழந்தாள். ஆனாலும் நாட்டைக் காக்கத் துடித்தாள். தன் இளவயது மகனிடம் வாள் கொடுத்துப் போரிடச் சொன்னாள் என ஒரு பாடல் விளக்குகிறது.
பெட்டகம் | - | அரிய செய்திகளைக் கொண்ட தொகுப்பு | ||
புறநானூறு | - | எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று |
புறநானூறு
பண்டைய மக்களின் வாழ்க்கை முறை, அரசர்களின் ஆட்சிமுறை, போர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
போரில் ஆண்களும் பெண்களும் வீரத்துடன் எதிர்த்து நின்றார்கள்
போரில் தந்தையையும் கணவனையும் இழந்த பெண் அச்சமின்றி தன் இளவயது மகனிடம் வாளைக் கொடுத்து மீண்டும் போருக்கு அனுப்பினாள் என்று பெண்ணின் வீரத்தை புறநானூறு குறிப்பிட்டுள்ளது.