இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.3 பாடி மகிழ்வோம்

கடல்

நீல வண்ணக் கடலிலே

நீந்திச் செல்லும் கப்பலாம்!

வாலைத் தூக்கி அடித்துமே

வாளை மீன்கள் நீந்துமாம்!

சிறந்த நல்ல பவழங்கள்

செறிந்து கிடக்கும் கடலிலே!

உவந்து மாதர் அணிந்திடும்

உயர்ந்த முத்தும் கடலிலே!

வெற்றி கொண்டு ஊதவே

வெள்ளைச் சங்கும் கடலிலே!

உற்ற நண்பன் போலவே

உதவும் உப்பும் கடலிலே!

-பி.வி. கிரி