இகரம்
(முதல் பருவம்)
தமிழர்களின் மரபு விளையாட்டுகளுள் ஒன்று கபடி. இதனைச் சடுகுடு என்றும் அழைப்பர். இவ்விளையாட்டை இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களும் விரும்பி ஆடுவர். கிராமத்துப் பொது இடங்களிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டினை ஆடுவர். ஆடுவோரை இரு அணியினராகப் பிரிப்பர். அணிக்கு ஏழு பேர் வீதம் சேர்ந்து ஆடுவர். பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக் கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, ஒருவரையோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ தொட்டு வரவேண்டும். தொடுவதற்கு வாய்ப்பில்லை என்றால் தொடாமலும் வரலாம். பாடிச் செல்வோர் அடுத்த அணியினரால் பிடிக்கவும் படலாம். அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். அதிக புள்ளிகள் எடுத்த அணி, வெற்றி பெற்றதாகக் கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு கபடி ஆகும்.
தமிழர்களின் மரபு விளையாட்டுகளுள் ஒன்று கபடி.
கபடி விளையாட்டை கிராமத்துப் பொது இடங்களிலும் ஆற்று மணலிலும் விளையாடுவர்.
கபடி விளையாட்டில் ஓர் அணியில் ஏழு பேர் இடம்பெறுவர்.
பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படையாகும்.
தவறு
பண்டைய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் முரசம் பயன்பாட்டில் இருந்தது. இதனை முரசு எனவும் கூறுவர். ஒரு செய்தியை அறிவிக்க இதனைப் பயன்படுத்தினர். முரசுகள் மூவகையாக இருந்தன. ஒன்று நீதிமுரசு. இது, சிறப்பான ஆட்சியின் சின்னமாக இருந்தது. இரண்டாவது, கொடை முரசு. இது, வள்ளல் தன்மைக்குச் சின்னமாகும். மூன்றாவது, படை முரசு. இது, வீரத்தின் சின்னமாகும். |
![]() |