இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.2 படிப்போம்

கடற்பயணம்

கிறிஸ்டோபர் கொலம்பஸ்

என் பெயர் கொலம்பஸ். எனக்குக் கடற்பயணம் செய்வதென்றால் மிகவும் பிடிக்கும். நான் கப்பலில் அடிக்கடி பயணம் மேற்கொண்டு புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புவேன். ஒருமுறை மேற்குத்திசை நோக்கிச் சென்று, கிழக்குத் திசையை அடைய முயற்சி செய்தேன். அவ்வாறு நான் சென்றபோது. இடையில் ஒரு நிலப்பகுதியைக் கண்டேன். அந்த நிலப்பகுதிதான் ‘அமெரிக்கா‘ என்று எனக்கு அப்போது தெரியாது. அப்பகுதி வளமிக்கதாகவும் செல்வங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. எனக்குப் பின்னால் கடற்பயணம் மேற்கொண்ட ‘அமெரிக்கோ வெஸ்புகி‘ என்பவர்தாம் அந்நிலப்பகுதியைப் பற்றி உலகத்திற்குத் தெரியப்படுத்தினார். அவருடைய பெயராலேயே அப்பகுதி, ‘அமெரிக்கா‘ என்று அழைக்கப்படுகிறது.

பொருள் அறிவோம்

1. பயணம் - ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுதல்
2. கடற்பயணம் - கப்பல் மூலம் கடலில் செல்லுதல்

விடை காண்போம்

கொலம்பஸுக்கு மிகவும் பிடித்த செயல் கடற்பயணம் செல்வது.

கொலம்பஸ் மேற்குத்திசை நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்கா

கொலம்பஸ் கண்ட நிலப்பகுதி வளமிக்கதாகவும் செல்வங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

‘அமெரிக்கா‘ என்னும் நிலப்பகுதி ‘அமெரிக்கோ வெஸ்புகி’ என்பவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.