இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.4 தெரிந்துகொள்வோம்

இணைமொழி

மனித வாழ்வு இன்பதுன்பம் நிறைந்தது.
மாணவர்கள் அல்லும் பகலும் அயராது படிக்கவேண்டும்.
என் நண்பன் அன்றும் இன்றும் மாறா அன்போடு உள்ளான்.
ஒத்த ஓசையுடைய இருசொற்கள் இணைந்தே வந்து, பொருளின் சிறப்பை உயர்த்திக் கூறுவதை இணைமொழி என்பர்.