இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.6 கேட்டல் கருத்தறிதல்

நெல்சன் மண்டேலா (1918 – 2013)

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் காந்தி என்று அழைக்கப்பட்டார். ஏனெனில், அவரது போராட்டங்கள் காந்தியைப்போல அறவழியிலேயே நடத்தப்பட்டன. தென்னாப்பிரிக்காவின் அதிபராகப் பதவியேற்றதும் அவர் சென்ற முதல் வெளிநாடு இந்தியா. தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்திய மக்களுக்காகப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.

வினாக்கள்

தென் ஆப்பிரிக்காவின் காந்தி என்று அழைக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா.

தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் இந்திய மக்களுக்காக தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டன.

இந்தியா

மண்டேலா காந்தியைப்போல அறவழியிலேயே போராட்டங்களை நடத்தினார்.