இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.4 தெரிந்து கொள்வோம்

பால்

பால்/பகுப்பு திணை விளக்கம் சான்று
ஆண்பால் உயர்திணை ஆணைக் குறிப்பது ஆண்பால் கவின், மாணவன், சிறுவன், அரசன்
பெண்பால் பெண்ணைக் குறிப்பது பெண்பால் செல்வி, மாணவி, சிறுமி, அரசி
பலர்பால் ஒருவருக்கும் மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால் மாணவர்கள், மக்கள்
ஒன்றன்பால் அஃறிணை ஒன்றை மட்டும் குறிப்பது ஒன்றன்பால் மரம், புலி, நாற்காலி
பலவின்பால் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால் மரங்கள், புலிகள், நாற்காலிகள்