இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.3 பாடி மகிழ்வோம்

தொழிலைக் கற்போம்

தொழிலைக் கற்போமே! – கைத்

தொழிலைக் கற்போமே!

 

அழகுப் பூக்கள் பின்னலாம்;

ஆடை தைக்கக் கற்கலாம்;

உழவுத் தொழிலைச் செய்யலாம்;

ஓவியங்கள் தீட்டலாம்!

 

கத்தரிக்கப் பழகலாம்;

காகிதப்பூ செய்யலாம்;

முத்து மாலை கோக்கலாம்;

முல்லைப் பூக்கள் தொடுக்கலாம்!

-வாணிதாசன்