இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.6 கேட்டல் கருத்தறிதல்

தாக்கா மஸ்லின் துணிவகை

இனியாவின் பிறந்தநாள் விழா

பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த அரசர்களும் செல்வந்தர்களும் அணிந்து மகிழ்ந்த துணி வகை மஸ்லின். இது, வங்கதேசத்தின் பாரம்பரிய துணி வகை. இதைத் ‘தாக்கா மஸ்லின்’ என்று அழைத்தனர். இத்துணியை அணிந்தவருக்கு உடலில் ஆடை இருப்பது போலவே தோன்றாது. அந்த அளவுக்கு மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இத்துணியாலான சேலை ஒன்றை, ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் அடைத்துவிடலாம். அந்த அளவிற்கு மெல்லிய இழைகளால் ஆனது, தாக்கா மஸ்லின் துணி. இத்துணியை நெய்வது வங்கதேசத்தின் பாரம்பரிய நூற்புக்கலையாகும். இக்கலையை, 2013 ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த படைப்புகளின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.

வினாக்கள்

வங்கதேசத்தின் பாரம்பரியத் துணி வகை மஸ்லின்

மஸ்லின் துணி ‘தாக்கா மஸ்லின்’ என்று அழைக்கப்பட்டது.

மஸ்லின் துணியாலான ஆடையை ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் அடைக்கலாம்.

2013 ஆம் ஆண்டு

மஸ்லின் துணிவகை பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

சுவைச்செய்தி

ஒவ்வொரு பூவுக்கும் ஒரு சிறப்பு உண்டு. மற்றப் பூக்களைவிடப் பருத்திப்பூவுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ஏன் தெரியுமா? நமது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று, ஆடை. நம் மானத்தைக் காக்கக்கூடிய ஆடை. பருத்தி இழையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால்தான், பூக்களில் சிறந்தது பருத்திப்பூ என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.