இகரம்
(முதல் பருவம்)
தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து பல சாதனைகளைச் செய்தவர், ஹெலன் கெல்லர். இவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர், தமது சிறுவயதிலேயே கண்பார்வையையும் கேட்கும் திறனையும் இழந்தார். இவருடைய ஆசிரியர் ஆன் சல்லிவன் இவரைக் கண்ணும்கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். ஆசிரியரின் சிறந்த அணுகுமுறை, ஹெலன் கெல்லரின் வாழ்வில் தன்னம்பிக்கையைத் தந்தது. பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கற்றுக்கொண்டார். பார்வையற்றவருக்கான பள்ளியில் படித்தார். பின்னர் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். பார்வையிழந்த முதல் பட்டதாரிப் பெண் என்னும் பெருமையை இவர் பெற்றார். மேலும் இவர் தமது 14 புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் தமக்கெனத் தனிமுத்திரையைப் பதித்தார்.
1. | தன்னம்பிக்கை | - | தன்னை முழுமையாக நம்புதல் |
2. | சாதனை | - | அரிய செயல் |
3. | அணுகுமுறை | - | நடந்துகொள்ளும் முறை |
4. | பட்டதாரி | - | பட்டப் படிப்பு படித்தவர் |
5. | பெருமை | - | சிறப்பு |
6. | பிரெய்லி எழுத்துமுறை | - | பார்வையிழந்தவர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட எழுத்துமுறை |
ஆன் சல்லிவன்
கவனம்
ஹெலன் கெல்லர் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். பார்வையற்ற இவர் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து பல சாதனைகளை செய்தவர். பார்வையிழந்த முதல் பட்டதாரிப் பெண் என்னும் பெருமையைப் பெற்றவர்.
ஹெலன் கெல்லர், சொற்பொழிவுகள் மற்றும் 14 புத்தகங்கள், கட்டுரைகள் எழுதி தமக்கெனத் தனிமுத்திரையைப் பதித்தார்.
மாணவர்களின் விருப்பம்
பிரெய்லி எழுத்து முறை.