இகரம்
(முதல் பருவம்)
விலங்குகள் காட்டின் செல்வங்கள். காடுதான் அவற்றின் வாழ்விடம். மனிதர்கள் தம் பொழுதுபோக்காகவும் உணவுக்காகவும் விலங்குகளை வேட்டையாடினர். தம் தேவைக்காகக் காடுகளை அழித்தனர். இதனால், விலங்குகளின் எண்ணிக்கையும் காட்டுவளமும் குறைந்தன. இதனைத் தடுக்க, தற்போது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ஆம் நாள் ‘உலக வனவிலங்கு நாள்’ கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் வனவிலங்குகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே, காடுகளை வளர்ப்போம்; வனவிலங்குகளைப் பாதுகாப்போம்.
விலங்குகள் காட்டின் செல்வங்கள்
காடு
மனிதர்கள் பொழுதுபோக்குக்காகவும் உணவுக்காகவும் விலங்குகளை வேட்டையாடினர்.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம்
காடு வளம் பெற நாம் காடுகளை வளர்க்க வேண்டும்
’உலக வனவிலங்கு நாள்’ மார்ச் 3ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.