இகரம்
(முதல் பருவம்)
பாடம் - 7
7.3 பாடிமகிழ்வோம்
பாட்டுப் பாடுவேன்
பாட்டுப் பாடுவேன் – நான்
பாட்டுப் பாடுவேன்
பலரும் புகழ, இனிய தமிழில்
பாட்டுப் பாடுவேன்
கேட்டு மகிழவே – நீங்கள்
கேட்டு மகிழவே
கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
கீதம் பாடுவேன் – நான்
கீதம் பாடுவேன்
-அழ. வள்ளியப்பா