இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.4 தெரிந்துகொள்வோம்

ஒருமை, பன்மை

ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை.
ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை.

ஒருமை பன்மை
சிறுத்தை
சிறுத்தைகள்
மரம்
மரங்கள்
கல்
கற்கள்
பூ
பூக்கள்
புறா
புறாக்கள்
குடைகள் பல வண்ணங்களில் உள்ளன
பழங்கள் மேசையின் மீது இருந்தன
பசுக்கள் புல்லை மேய்கின்றன
தோட்டத்தில் புற்கள் வளர்ந்திருந்தன