இகரம்
(முதல் பருவம்)
தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். தாம் படைத்த நூல்களில் இயற்கையைப் போற்றி மகிழ்ந்தனர். அவற்றுள் ஒன்று, குற்றாலக் குறவஞ்சி. இந்நூலில் குற்றால மலையின் வளம் அழகாகக் கூறப்பட்டுள்ளது. “தென்றல் அசைந்துவரும் தென் தமிழ்நாட்டில் இம்மலை அமைந்துள்ளது. இங்குக் கோங்கு, வேங்கை முதலிய மரங்கள் ஓங்கி வளரும். குரவம், முல்லை. செண்பக மலர்கள் மணம் வீசும். கோல மயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் பாட்டு இசைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மலையிலிருந்து வெண்மையான அருவிநீர் விழும். இதன் துளிகள் சிதறும்போது, மெல்லிய புகைபோல் தோன்றும். இங்கு வாழும் மக்கள். கிழங்குகளைத் தோண்டி எடுப்பர்; தேனும், தினைமாவும் உண்பர்” என்னும் செய்திகளைக் குறமகள் ஒருத்தி கூறுவதுபோல் இந்நூலில் பாடல்கள் உள்ளன.
1. | இயைந்து வாழ்தல் | - | சேர்ந்து வாழ்தல் |
2. | போற்றுதல் | - | வாழ்த்துதல் |
3. | குறவஞ்சி | - | சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று |
4. | தென்றல் | - | தெற்கிலிருந்து வீசும் மென்மையான காற்று |
திருக்குற்றாலக் குறவஞ்சி
கோங்கு, வேங்கை
குரவம், முல்லை, செண்பக மலர்கள்
தேனுண்ட வண்டுகள் பாட்டு இசைக்கும்
குற்றால மலையிலிருந்து வெண்மையான அருவி நீர் விழும் . அருவியிலிருந்து நீர் துளிகள் சிதறும்போது, மெல்லிய புகைபோல் தோன்றும். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
குற்றால மலையில் வாழும் மக்கள் கிழங்கு, தேன், தினைமாவு ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றனர்.