இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.3 பாடி மகிழ்வோம்

பூத்ததே!

சின்னத் தம்பி சிரிப்பைப் போலச்

செடியில் முல்லை பூத்ததே! – வீட்டுச்

செடியில் முல்லை பூத்ததே!

சின்ன அக்கா சிரிப்பைப் போலச்

செந்தா மரையும் பூத்ததே! – குளச்

செந்தா மரையும் பூத்ததே!

அம்மா சிரிக்கும் சிரிப்பைப் போல

அல்லி மலரும் பூத்ததே! – செவ்

வல்லி மலரும் பூத்ததே!

அப்பா சிரிக்கும் சிரிப்பைப் போல

அழகு ரோசா பூத்ததே! - முள்

அழகு ரோசா பூத்ததே!

-வாணிதாசன்