இகரம்
(முதல் பருவம்)
குற்றாலம் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தென்னகத்தின் “ஸ்பா“ என்று அழைக்கப்படுகிறது. குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. அவற்றுள் பேரருவியே முதன்மையான அருவியாகும். பேரருவிக்குமேல் சிற்றருவி அமைந்துள்ளது.
பேரருவியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் செண்பகாதேவி அருவி உள்ளது. செண்பகாதேவி அருவியின் மேல்பகுதியில் தேனருவி உள்ளது. இங்குப் பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. தேனருவி அருகே பாலருவி அமைந்துள்ளது.
குற்றாலத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ஐந்தருவி; இது ஐந்து கிளையாகப் பிரிந்துள்ளதால் ஐந்தருவி என்பர். பழத்தோட்ட அருவியை விஐபி நீர்வீழ்ச்சி என்று அழைப்பர். புலிகள் அடிக்கடி வந்து செல்லும் அருவிக்குப் புலி அருவி என்று பெயர். பழைய குற்றாலம் அருவி அழகனாற்றில் அமைந்துள்ளது.
தென்காசி
ஒன்பது
செண்பகாதேவி அருவி
குற்றாலத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் ஐந்தருவி உள்ளது.
புலி அருவி
உலகின் மிக நீளமான மலைத்தொடர் ‘ஆண்டிஸ் மலைத்தொடர்‘ (Andes). இந்த மலைத்தொடரில் உயரமான மலை முகடாக இருப்பது ‘அக்கோன்காகுவா‘ ஆகும். இங்கு, உலகின் மிக உயரமான எரிமலை உள்ளது. இந்த மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர், பெரு, வெனிசூலா ஆகிய ஏழு நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளது. இந்நாடுகளை ‘ஆண்டிஸ் நாடுகள்‘ என்றும் அழைப்பர். |
![]() |