இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. மக்களைக் குறிக்கும் திணை எது?   உயர்திணை அஃறிணை
2. பெயரையோ வினையையோ சார்ந்துவரும் சொல் எது?   கடைச்சொல் இடைச்சொல்
3. ‘விடாப்பிடி’ என்னும் மரபுத்தொடரின் பொருள் என்ன?   செயலில் உறுதி ஓங்கி வளரும்
4. என் மணம் மகிழ்ந்தது – இத்தொடரிலுள்ள பிழையை நீக்குக.   என் மனம் மகிழ்ந்தது என் மணம் மகிழ்ந்தது
5. ‘அல்லும்பகலும்’ – இந்த இணைமொழியைக் கொண்டு தொடர் உருவாக்குக.   என் தந்தை அல்லும்பகலும் உழைத்தார் என் தந்தை காட்டிலும்மேட்டிலும் நடந்தார்
6. 90 – இந்த எண்ணுக்குரிய எண்ணுப்பெயரை எழுதுக.   நூறு தொண்ணூறு
7. அறுபது – இந்த எண்ணுப்பெயருக்குரிய எண்ணைக் குறிப்பிடுக.   60 90
8. மரம் – இச்சொல்லுக்குரிய பன்மைச் சொல்லை எழுதுக.   மரங்கள் செடிகள்
9. பற்கள் – இச்சொல்லுக்குரிய ஒருமைச் சொல்லை எழுதுக.   பலபல பல்
10. பலவின்பாலுக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.   காளைகள் காளை