இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.2 படிப்போம்

கல்வியே அழியாச்செல்வம்

கல்விக்கு எல்லை இல்லை. நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்கலாம். நம்மிடம் இருக்கும் பொருள்கள் எப்போதும் நிலையானவை அல்ல. அவை அழியக்கூடியவை. ஆனால், அழியாத செல்வமாக இருப்பது, கல்வியே ஆகும். உங்களது கல்விச்செல்வத்தை நீங்கள் அளவின்றிப் பிறர்க்கு வழங்கலாம். ஏனெனில், கல்விச்செல்வம் கொடுக்கக், கொடுக்கக் குறையாமல் வளரும். கற்றவர்களையே இவ்வுலகம் போற்றுகிறது. கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பாக அமையும்.

பொருள் அறிவோம்

1. அழியாச் செல்வம் - அழியாத செல்வம் (நிலையான செல்வம்)
2. எல்லை - வரம்பு

வினாக்கள்

அழியாத செல்வமாக இருப்பது கல்விச்செல்வம் ஆகும். கல்விச்செல்வத்தை அளவின்றிப் பிறர்க்கு வழங்கலாம்.

கற்றவர்களையே இவ்வுலகம் போற்றுவதால் கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பாக அமைகிறது.

கல்விச்செல்வம். ஏனெனில், கல்விச்செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் வளரும்.

கல்விச்செல்வம்

கற்றவர். ஏனெனில் கற்றவர்களையே இவ்வுலகம் போற்றுகிறது.