இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

(குறள் – 400)

-திருவள்ளுவர்

(கேடில் – அழிவில்லாத; விழுச்செல்வம் – சிறந்த செல்வம்; மாடல்ல – செல்வம் அல்ல)

பொருள்:

ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.

கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் யாவும் செல்வம் அல்ல.