இகரம்
(முதல் பருவம்)
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்
(பாடல் – 2)
-ஔவையார்
(உபகாரம் – உதவி; ஈரமிலா – இரக்கம் இல்லா; ஈந்த – செய்த; நேர் – ஒப்பு/சமம்)
நல்லவர்க்குச் செய்யும் உதவி, கல்லில் செதுக்கிய எழுத்தைப் போன்றது. அஃது எப்போதும் நிலைத்திருக்கும். இரக்கம் இல்லாதவர்க்குச் செய்யும் உதவி, நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்தைப் போன்றது. அது எழுதும்போதே அழிந்துவிடும்.