இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.2 படிப்போம்

தொழில்கள்

இவர் உழவர். உழவுத்தொழில் செய்கிறார்.
இவர் குயவர். களிமண்ணைக் குழைத்துப் பானைகள் வனைகிறார்.
இவர் நெசவாளர். தறியில் ஆடை நெய்கிறார்.
இவர் தச்சர். அழகிய வேலைப்பாடு மிகுந்த கதவை உருவாக்குகிறார்.
இவர் மீனவர். மீன்பிடி தொழில் செய்கிறார்.
இவர் ஓவியர். மெல்லிய தூரிகை கொண்டு வண்ண ஓவியம் தீட்டுகிறார்.
இவர் கைவினைக் கலைஞர். அழகிய பொம்மைகளை உருவாக்குகிறார்.
இவர் சிற்பி. சிலைகளைச் செதுக்குகிறார்.

பொருள் அறிவோம்

1. பரம்பரை - வழிவழியாக வருவது
2. தறி - ஆடை நெய்ய உதவும் கருவி
3. தூரிகை - மெல்லிய இழைகளால் ஆன எழுதுகோல்
4. தீட்டுதல் - வரைதல்
5. கைவினைப்பொருள் - கைகளால் உருவாக்கப்படும் அழகிய பொருள்கள்

வினாக்கள்

குயவர், களிமண்ணைக் குழைத்துப் பானைகள் வனைகிறார்

நெசவாளர்

கைவினைக் கலைஞர்

மீன்பிடி தொழில்

உழவுத்தொழில்