இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.6 கேட்டல் கருத்தறிதல்

பருத்திப் பெண்டிர்

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நூல் நூற்கும் தக்களிகள்.

சங்ககால மக்கள் ‘பருத்தி, பட்டு’ நூல்களைக் கொண்டு ஆடைகள் நெய்தனர். பருத்தி நூல் நூற்பதில் அவர்கள் திறமை பெற்றிருந்தனர். நூல் நூற்ற பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்’ என அழைக்கப்பட்டனர். ஆடைகளைத் தைப்பதற்கும் அவர்கள் அறிந்திருந்தனர். ‘கலிங்கம்’ என்னும் துணி வகை கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சங்க காலத்தில் துணிகளின் மூலம் பொருளாதாரமும் உயர்ந்தது. தமிழ் இலக்கியமான ‘பொருநராற்றுப்படை’ என்னும் நூல் பட்டாடையின் மேன்மை பற்றிக் கூறியுள்ளது.

வினாக்கள்

சங்ககால மக்கள் ‘பருத்தி, பட்டு’ நூல்களைக் கொண்டு ஆடைகள் நெய்தனர்.

நூல் நூற்ற பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்’ என அழைக்கப்பட்டனர்.

‘பொருநராற்றுப்படை’

‘கலிங்கம்’ என்னும் துணி வகை கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

சங்ககால மக்கள்

தகவல் துளி

முத்துக் குளித்தல் (Pearl hunting) என்பது, கடலின் ஆழமான பகுதிகளிலுள்ள சிப்பிகளை எடுத்து வருவதாகும். முத்துக்குளித்தலை முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்றும் கூறுவர். தமிழர்கள் பழங்காலத்திலிருந்தே முத்துக்குளித்தலை ஒரு தொழிலாகச் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் முத்து அதிகமாக எடுக்கப்படுகிறது.
முத்துக்குளித்தல்