இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.5 மொழியோடு விளையாடுவோம்

கீழ்க்காணும் வினாக்களை படித்து அதற்கான விடையைக் கண்டறிந்து படத்துடன் பொருத்தவும்.

1. ‘நாய்’ – முதலெழுத்தை மாற்றினால் படுத்து உறங்கலாம் பாய்------
2. ‘புலி’ – இறுதி எழுத்தை மாற்றினால் குழம்பு வைக்கலாம் ------
3. ‘யானை’ – முதலெழுத்தை மாற்றினால் எலியைப் பிடிக்கும் ------
4. ‘வளி’ – முதலெழுத்தை நெடிலாக மாற்றினால் தண்ணீர் பிடிக்கலாம் ------
5. ‘அன்பு’ – நடுவிலுள்ள எழுத்தை மாற்றினால் வில்லிலிருந்து புறப்படும் ------
6. “ஆண்டு” – நடுவிலுள்ள எழுத்தை நீக்கினால் ஒரு விலங்கைக் குறிக்கும் ------
7. ‘வளை’ – கடைசி எழுத்தை மாற்றினால் மீன் பிடிக்கலாம் ------
8. ‘குருவி’ – முதலெழுத்தை மாற்றினால் அதில் குளிக்கலாம் ------
9. 'வானம்’ – முதலெழுத்தைக் குறிலாக மாற்றினால் விலங்குகள் வசிக்கலாம் ------
10. ‘கடி’ – என்ற சொல்லின் இடையில் ஓர் எழுத்தைச் சேர்த்தால் காட்டு விலங்கைக் குறிக்கும் ------