இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.4 தெரிந்துகொள்வோம்

பெயரடை

பெயர்ச்சொல்லின் பண்பை உணர்த்துவது பெயரடை

ஆழமான கிணறு
நீளமான ஆறு
உயரமான மரம்
பெரிய வீடு
அழகிய பறவை
சின்னப் பையன்

வினையடை

வினைச் சொல்லின் பண்பை உணர்த்துவது வினையடை

கண்ணன் வேகமாக நீந்தினான்
கவின் நன்றாகப் படித்தான்
தாத்தா தள்ளாடி நடந்தார்
மணி வீட்டைப் புதுமையாகக் கட்டினான்
வானம்பாடி இனிமையாகப் பாடியது
வளவன் மெதுவாக நடந்தான்