இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.2 படிப்போம்

வேளாண்மை

தொழில்களுள் முதன்மையானது உழவு. உலக மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை விளைவிப்பதால் உழவுத் தொழிலே சிறந்தது. ‘உழவுத் தொழில் செய்யும் உழவன், உலகம் என்னும் தேருக்கு அச்சாணி‘ என்று திருவள்ளுவர் போற்றுகிறார். உழவுத்தொழிலுக்குக் கால்நடைகள் உதவுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா, பிரேசில், இந்தோனேஷியா, சீனா போன்ற நாடுகள் உழவுத்தொழிலில் சிறந்துள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உழவுத்தொழிலும் உதவுகிறது.

பொருள் அறிவோம்

1. உழவுத்தொழில் - பயிர்த்தொழில்
2. உழவர் - பயிர்த்தொழில் செய்பவர்
3. அச்சாணி - முதன்மையான கருவி; கடையாணி
4. கால்நடைகள் - ஆடு, மாடு முதலிய விலங்குகள்
5. இயந்திரங்கள் - கருவிகள்

வினாக்கள்

தொழில்களுள் முதன்மையான தொழில் உழவு.

உலக மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை விளைவிப்பதால் உழவுத்தொழிலே சிறந்தது.

'உலகம் என்னும் தேருக்கு அச்சாணி' என திருவள்ளுவர் உழவனைக் கூறுகிறார்.

இந்தியா, அமெரிக்கா, பிரேசில், இந்தோனேஷியா, சீனா

உழவுத்தொழில் செய்வதற்கு கால்நடைகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.