இகரம்
(முதல் பருவம்)
ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள, கேட்கப்படுவது “கேள்வி” அல்லது “வினா” எனப்படும்.
யார் | உங்கள் நண்பன் யார்? |
என்ன | மேசையில் இருப்பது என்ன? |
எது | உங்கள் தங்கைக்குப் பிடித்த பழம் எது? |
எந்த | உங்கள் வீட்டிற்குச் செல்ல எந்தப் பேருந்தில் ஏற வேண்டும்? |
எங்கே | விடுமுறைக்கு எங்கே செல்வாய்? |
எப்படி | ஊருக்கு எப்படிச் செல்வாய்? |
ஏன் | நேற்று நீங்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை? |
எப்பொழுது | நீங்கள் எப்பொழுது விளையாடச் செல்வீர்கள்? |
எத்தனை | உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் வேண்டும்? |
எவ்வளவு | உங்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் எவ்வளவு தூரம்? |
எவ்வாறு | உங்கள் நண்பனை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்? |