இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.3 பாடி மகிழ்வோம்

மிக அழகு

அன்னம் போல மிதந்து அசைந்தே
ஆற்றில் செல்லும் படகினும்
மின்னும் வானம் தனில் மிதக்கும்
மேகக் கூட்டம் மிக அழகாம்

ஆற்றைக் கடக்க இருகரையை
அணைத்தே எழுப்பும் பாலத்தினும்
காற்றில் கரையா வானவில்
காணக் காண மிக அழகாம்

- வயலூர் சண்முகம்