இகரம்
(முதல் பருவம்)
ஆசிரியர் கரும்பலகையில் மூன்று தாவரங்களின் படங்களை வரைந்தார். இத்தாவரங்களைப் போலவே நம் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் வாழை மரம்போல் ஒரு நட்பு. வாழைமரத்திற்குத் தொடர்ந்து நீர் ஊற்றினால்தான் பயன் தரும். இரண்டாவதாக, தென்னை மரம்போல் ஒரு நட்பு. தென்னை மரத்திற்கு நாம் எப்போதாவது நீர் ஊற்றினாலும், பயன் தரும்.
மூன்றாவதாக, பனை மரம்போல் ஒரு நட்பு. பனைமரத்திற்கு நாம் நீர் ஊற்றினாலும் ஊற்றாவிட்டாலும் பயன் தரும். மேலும், பாதுகாத்தாலும் பாதுகாக்காவிட்டாலும் அது நமக்குப் பயன் தரும். எதையும் எதிர்பார்க்காமல் நமக்கு அது உதவும் என்றார் ஆசிரியர். இதைக்கேட்ட மாணவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் பற்றி நன்கு உணர்ந்தனர்.
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் பனை மரம் போலான முறையை தேர்ந்தெடுத்தால் நல்ல நண்பன் கிடைப்பான்.
என்னுடைய தோழன் / தோழி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி எப்போழுதும் நட்புடன் இருக்க வேண்டும்.
நல்ல நட்பை தெரிவு செய்தவரின் வாழ்க்கை காலம் முழுதும் துணையுடன் சிறப்பாக இருக்கும்.
என் நண்பர் என்றும் என்னுடன் இணை பிரியாமல் நட்புடன் இருப்பார். நான் தவறு செய்யும்பொழுது எனக்கு சிறந்த அறிவுரை வழங்குவார்.