இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
கருத்து விளக்கப்படம் & தகவல் துளி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

கீழடி.

மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கு முந்தையது.

கி.மு.4ஆம் நூற்றாண்டு

சூரியன், நிலவு, வடிவியல்

செய்தி – மக்கள் தொடர்புத்துறை

தகவல் துளி

பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜான் ஸ்மித். அவர், ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்தார். அவர் துரத்திச் சென்ற விலங்கு ஒரு புதரில் மறைந்தது. அந்தப் புதருக்கு அருகில் சென்று பார்த்தபோது குகை ஒன்று தெரிந்தது. அந்தக் குகைக்குள் சென்ற அவர் பெரும்வியப்புக்கு ஆளானார். அங்கிருந்த குகை ஓவியங்களை அவர் இதுவரை எங்குமே கண்டதில்லை. அந்த ஓவியங்களில் அடர்ந்த ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் காணப்பட்டன. காலம் கடந்தும் அந்த ஓவியங்களிலுள்ள நிறங்கள் அழியாமல் இருப்பதைக் கண்டார், இதற்குக் காரணம், ஓவியக் கலைஞர்களின் கலைநுட்பமே என்பதை உணர்ந்தார். அவரை வியப்படையச் செய்த அந்த ஓவியங்களே அஜந்தா குகை ஓவியங்கள். அவை இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது.
அஜந்தா குகை