இகரம்
(முதல் பருவம்)
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது
(பாடல் – 16)
-பூதஞ்சேந்தனார்.
(உரைத்தல் – கூறுதல்; ஈதல் – கொடுத்தல்)
கற்றவர்முன் தாம் கற்றதை எடுத்துரைத்தல் மிகவும் இனியது.
தம்மைவிட அறிவில் சிறந்தவருடன் பழகுவது மிகவும் இனியது.
எள் அளவு கூடத் தான் பிறரிடம் பொருளுதவி கேட்காமல்.
பிறர்க்குக் கொடுத்தல் எல்லா வகையிலும் மிகவும் இனியதாகும்.