இகரம்
(முதல் பருவம்)
ஆல்வினுக்கு நெடுநாளாக இசைக்கருவி அருங்காட்சியகம் செல்ல வேண்டும் என்று ஆசை. இன்று காலை, அவன் அம்மா அங்குப் போகலாம் என்று சொன்னதும் மகிழ்ந்தான். இதற்குமுன் கணினியில் மட்டுமே பார்த்த அந்த இடத்தை, நேரில் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே மகிழ்ச்சியைத் தந்தது.
அவர்கள், அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றார்கள். அங்கு ஏராளமான இசைக்கருவிகள் இருந்தன. கண்கள் வியப்பில் விரிய, ஆல்வின் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தான். தோல் கருவிகள் இருக்கும் பகுதிக்குச் சென்றான். அங்கிருந்த கருவி ஒன்று அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை மெல்லத் தட்டினான். அதிலிருந்து ஒலி எழுந்தது. வியப்புடன் மீண்டும் தட்டினான். “யார் நீ?” என்ற குரல் கேட்டது. சற்றே அதிர்ந்து சுற்றிப் பார்த்தான். ஆம், ஒலி அக்கருவியிலிருந்துதான் வந்தது என்பதை உணர்ந்தான். அதனோடு பேசத் தொடங்கினான்.
ஆல்வின் : | என் பெயர் ஆல்வின். உன் பெயர் என்ன? |
இசைக்கருவி : | என் பெயர் பறை. என்னைத் தப்பு என்றும் கூறுவார்கள். உனக்கு இசைக்கருவிகள் என்றால் பிடிக்குமா? |
ஆல்வின் : | எனக்கு இசையும் பிடிக்கும். இசைக்கருவிகளும் பிடிக்கும். நீ எந்த நாட்டு இசைக்கருவி? |
பறை : | நான் தமிழ்நாட்டின் இசைக்கருவி. |
ஆல்வின் : | ஆமாம், உனக்கு ஏன் பறை என்று பெயர் வந்தது? |
பறை : | பறை என்றால் கூறு அல்லது சொல் என்று பொருள். ஒரு செய்தியைத் தெரிவிக்கும்போது என்னை இசைப்பார்கள். எனவே பறை என்ற பெயர் வந்தது. |
ஆல்வின் : | ஓ அப்படியா? உன்னை எப்படிச் செய்கிறார்கள்? |
பறை : | வேப்பமரப்பலகையை வட்டமான சட்டம்போல் செய்வார்கள். பிறகு, பதப்படுத்தப்பட்ட விலங்கின் தோலை அந்தச் சட்டத்தில் இறுக்கமாகக் கட்டுவார்கள். பின்னர், புளியங்கொட்டைப் பசையைப் பயன்படுத்தி முழுமையாக ஒட்டுவார்கள். நான் தயாராகிவிடுவேன். |
ஆல்வின் : | எப்படி ஒலி எழுப்புவார்கள்? |
பறை : | மூங்கிலால் செய்யப்பட்ட சிம்புக்குச்சி மற்றும் பூவரசங்குச்சியால் செய்யப்பட்ட அடிகுச்சியால் அடித்து ஒலி எழுப்புவார்கள். |
ஆல்வின் : | எப்போதெல்லாம் உன்னை இசைப்பார்கள்? |
பறை : | பழங்காலத்தில் விலங்குகளை விரட்டவும் அரசர்களின் ஆணைகளை அறிவிக்கவும் என்னை அடித்து ஒலி எழுப்பினார்கள். இப்போது, விழாக்காலங்களிலும் இறப்பு நிகழ்வுகளிலும் என்னை இசைக்கிறார்கள். ஆகையால், தமிழர்களின் வாழ்வியலோடு நான் எப்போதும் இணைந்து இருக்கிறேன். |
ஆல்வின் : | உன்னை அடிக்கும்போது மிக அதிகமாகச் சத்தம் வருமா? |
பறை : | ஆமாம். அது மட்டுமா! என்னை முறையாகத் தாளம் தவறாது அடித்தால், அனைவரையும் ஆட வைப்பேன். |
ஆல்வின் : | உன்னை அடிக்கும்போது மிக அதிகமாகச் சத்தம் வருமா? |
பறை : | ஆமாம். அது மட்டுமா! என்னை முறையாகத் தாளம் தவறாது அடித்தால், அனைவரையும் ஆட வைப்பேன். |
ஆல்வின் : | உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானும் உன்னை இசைக்கலாமா? |
பறை : | பறையிசையைக் கற்றுத்தரும் ஆசிரியரிடம் முறையாகக் கற்று இசைக்கலாம். |
(ஆல்வின் பறையைத் தட்ட … டம் டம் டம் என ஒலிக்கிறது.) |
1. | பறை | - | ஒரு தோல் இசைக்கருவி | |
2. | சிற்றூர் | - | சிறிய கிராமப்பகுதி | |
3. | தாளம் | - | ஓசை |
நம் மனத்தை மகிழ்விப்பது இசை
பறை, வீணை, தம்புரா, தபேலா, மிருதங்கம், வயலின்
பழங்காலத்தில் விலங்குகளை விரட்டவும், அரசர்களின் ஆணைகளை அறிவிக்கவும் பயன்பட்டது.
வேப்பமரப்பலகையை வட்டமான சட்டம்போல் செய்த பிறகு பதப்பட்ட விலங்கின் தோலை அந்தச் சட்டத்தில் இறுக்கமாகக் கட்டி, பின்னர், புளியங்கொட்டைப் பசையைப் பயன்படுத்தி முழுமையாக ஒட்டி பறை இசைக்கருவி செய்யப்படுகிறது.
தாளம் தவறாது அடித்தால் அனைவரையும் ஆட வைக்கும் சிறப்புடையதாகப் பறை இசை விளங்குகிறது.