இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
14.3 பாடி மகிழ்வோம்
அணில் பாடல்

அழகிய தமிழில் எழுதுங்கள்

அழகிய தமிழில் எழுதுங்கள்

அனைவரும் மகிழ்ந்து பழகுங்கள்!

பிழைகளை ஒழிக்க வாருங்கள்

பிள்ளைகள் விரைந்து சேருங்கள்

 

முயற்சிகள் செய்தால் முடியாதா?

முற்றிலும் நெஞ்சில் படியாதா?

பயிற்சிகள் என்றும் வெற்றி பெறும்

பைந்தமிழ் நாவில் பற்றி வரும்

 

படிக்கும் காலம் பொற்காலம்

பண்பை வளர்க்கும் நற்காலம்

படித்தோர் பாரில் உயர்ந்தார்கள்

படிக்க வாரீர் தோழர்களே!

-கோ. மோகனரங்கன்