இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
14.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

(குறள் – 504)

-திருவள்ளுவர்

(குணம் – பண்பு: நாடி – ஆராய்ந்து; மிகை – மிகுதியான)

பொருள்:

ஒருவனுடைய குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து, அவற்றுள் எது மிகுதியாக இருக்கிறதோ அதைக்கொண்டே அவன் எப்படிப்பட்டவன் என மதிப்பிட வேண்டும்.