இகரம்
(இரண்டாம் பருவம்)
சிவகங்கையின் மன்னராக விளங்கியவர் சின்ன மருது. அவரது கொடைச் சிறப்பை விளக்கும் வகையில் வழிவழியாகக் கூறப்படும் ஒரு நிகழ்வுதான் இது. அவர், ஒருமுறை நெடுந்தொலைவு பயணம் செய்ததால் களைப்பாக இருந்தார். அப்போது அவருக்குப் பசித்தது. தூரத்தில் ஓர் ஓலைக்குடிசையைப் பார்த்தார். அங்குச் சென்று அந்த வீட்டிலிருந்த பாட்டியிடம், ‘‘எனக்குப் பசியாக உள்ளது, சாப்பிட ஏதாவது தாருங்கள்“ என்று கேட்டார்.
அவரை வரவேற்ற பாட்டி,‘‘வீட்டில் பழைய சோறுதான் உள்ளது“ என்றார். “எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தாருங்கள்“ என்றார். பாட்டி கொடுத்த பழைய சோற்றைச் சின்ன மருது விரும்பி உண்டார். தாம் யாரென்று தெரியாமலே அன்பாக விருந்தோம்பல் செய்த அந்தப் பாட்டிக்குப் பரிசளிக்க விரும்பினார். என்ன பரிசு தெரியுமா?
தன்னை யாரென்று அறியாது அமுதென அள்ளிக்கொடுத்த பழைய சோற்றிற்காக அந்த ஊரையே பாட்டிக்குப் பரிசாக அளித்தார் சின்ன மருது. அந்த ஊரின் பெயர்தான் “பழம்சோறு குருநாதனேந்தல்”
சிவகங்கை
சின்ன மருது கொடைச்சிறப்புடையவர்
பழைய சோறு
பழம்சோறு குருநாதனேந்தல் என்னும் ஊர்
விருந்தோம்பல்