இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
கருத்து விளக்கப்படம் & தகவல் துளி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

உற்றார் உறவினர்களுடன் நேரம் கிடைக்கும்போது அமர்ந்து பேசுவதற்கும், பயணம் செய்பவர் ஓய்வு எடுப்பதற்கும் திண்ணை வீடுகள் பயன்படுகின்றன.

களைப்புடன் வருபவர்கள் நீர் அருந்துவதற்காக வீட்டின் திண்ணையில் பானை வைத்துள்ளனர்.

தகவல் துளி

கோவையில் ‘ஒரு ரூபாய்க்கு இட்டலி’ விற்பனை செய்து புகழ்பெற்றவர் கமலாத்தாள். இவரது சேவையைப் பாராட்டி மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்ததோடு மஹிந்திரா குழுமத்தின் சார்பில் 1.75 சென்ட் நிலம் பரிசாக வழங்கினார். அதன்பின், வீடு மற்றும் இட்டலிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் செய்துகொடுத்தார். இந்நிலையில் அன்னையர் தினமான மே 8, 2022 ஆம் ஆண்டில் கமலாத்தாள் பாட்டியிடம் வீட்டுக்கான சாவி வழங்கப்பட்டது.
கமலாத்தாள்