இகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு நாட்டின் தொன்மையை அறிவதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, பழமொழி. இதனை முதுமொழி என்றும் கூறுவர். மக்களின் அனுபவங்களே பழமொழிகளாக உருவாகின்றன. முதியவர்கள் கூறும் கதைகளில் பழமொழிகள் கட்டாயம் இடம்பெறுகின்றன. மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பழமொழிகள் தெரிவிக்கின்றன. உங்களுக்காக, இதோ சில பழமொழிகள்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
1. | தொன்மை | - | பழைமை | |
2. | சான்று | - | சாட்சி | |
3. | அனுபவம் | - | பட்டறிவு | |
4. | முதியவர்கள் | - | வயதில் மூத்தவர்கள் |
முதுமொழி
மக்களின் அனுபவங்களே பழமொழிகளாக உருவாகின்றன.
பழமொழிகளின் வாயிலாக மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறியலாம்.
“அன்பை விதைத்தவன் நன்றியை அனுபவிப்பான்” என்பது அரேபியப் பழமொழி கூறும் அன்பின் சிறப்பு ஆகும்.
“சிறுதுளி பெருவெள்ளம்” என்பது சேமிப்பு சிறியதாக இருந்தாலும் பிற்காலத்தில் அது தரக்கூடிய பயன் மிக அதிகம் என்பதாகும்.