இகரம்
(இரண்டாம் பருவம்)
பறக்கும் குருவி யோடென் - உள்ளம்
பறந்து பறந்து திரியும்;
கறக்கும் பசுவைச் சுற்றி - அதன்
கன்று போலத் துள்ளும்.
ஈயும் எனக்குத் தோழன் - ஊரும்
எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் - குள்ள
நரியும் எனக்கு நண்பன்.
- கவிமணி தேசிக விநாயகனார்