இகரம்
(இரண்டாம் பருவம்)
மகிழனும் ஆதிமொழியும் தாத்தாவுடன் உயிரியல் பூங்காவிற்குச் சென்றனர்.
“ஐ! யானை! யானைக்குட்டி” என இருவரும் கத்தினர். தாத்தா “யானைக்குட்டி என்று கூறக்கூடாது; யானைக்கன்று என்று கூற வேண்டும்” என்றார். |
![]() |
அதோ சிங்கம்! அதன் குட்டிக்கு என்ன பெயர் தாத்தா? என்று கேட்டான் மகிழன். “சிங்கக்குருளை எனக் கூற வேண்டும்” என்றார் தாத்தா. |
![]() |
“அப்படின்னா புலிக்குட்டிக்கு?” என்று ஆதிமொழி கேட்க, தாத்தா உடனே, “புலிப்பறழ்” என்றார். |
![]() |
தாத்தா, நாம் ஏன் இவ்வாறு அழைக்கிறோம்? என்று ஆதிரா கேட்டாள். அதற்குத் தாத்தா, இதுதான் மரபு என்றார். மரபா? அப்படியென்றால் என்ன? என்றாள் அவள். நம் முன்னோர்கள் ஒரு சொல்லை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அச்சொல்லால் அவ்வாறே வழங்க வேண்டும் அதுதான் மரபு என்றார் தாத்தா.
ஒலிமரபு | ||||
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ஆந்தை அலறும் | கோழி கொக்கரிக்கும் | மயில் அகவும் | காகம் கரையும் | குயில் கூவும் |