இகரம்
(இரண்டாம் பருவம்)
இந்திய விஞ்ஞானிகளுள் குறிப்பிடத்தக்கவர், கோவையைச் சேர்ந்த கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு, 1893 - 1974). இவர், மின்னியல், மின்னணுவியல், தானியங்கி, விவசாயம் எனப் பல்துறையில் புகழ் பெற்றவர். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர். ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என அழைப்பர். மின்மோட்டார், சுவர்க்கடிகாரம், சிமெண்ட் கலவை இயந்திரம், சவரம் செய்யும் கருவி, உருளைக்கிழங்கு தோல் சீவும் கருவி, கம்பியில்லா ஒலிபரப்புக் கருவி, தானியங்கிச் சீட்டு அளிக்கும் கருவி, தமிழில் அழைப்பொலி கருவி முதலியவற்றைக் கண்டறிந்தார். இவரது பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ எனப் பெயரிட்டு ஜெர்மன் நாடு பெருமைப்படுத்தியது.. கண்டுபிடிப்பாளராக மட்டும் இல்லாமல் யுனைடெட் மோட்டார் சர்வீஸ், பருத்தி ஆலை எனப் பல தொழில்களிலும் ஈடுபட்டிருந்தார்.
ஜி.டி. நாயுடு மின்னியல், மின்னணுவியல், தானியங்கி, விவசாயம் எனப் பல்துறையில் புகழ்பெற்று விளங்கினார்.
நாயுடு காட்டன்
ஜி.டி. நாயுடு மின்மோட்டார், சுவர்க்கடிகாரம், சிமெண்ட் கலவை இயந்திரம், சவரம் செய்யும் கருவி, உருளைக்கிழங்கு தோல் சீவும் கருவி, கம்பியில்லா ஒலிபரப்புக் கருவி, தானியங்கிச் சீட்டு அளிக்கும் கருவி, தமிழில் அழைப்பொலி எனப் பல்வேறு கருவிகளைக் கண்டறிந்தார்.
ஜி.டி. நாயுடுவை இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் எனப் புகழ்ந்தனர்.
உயிரினங்கள் வாழமுடியாத நீர்நிலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இஸ்ரேலில் உள்ள சாக்கடல் (Dead Sea) என்று அழைக்கப்படும் கடலில்தான் இந்த நிலை உள்ளது. ஏன் தெரியுமா? இக்கடலில் மிக அதிக அளவு உப்பு உள்ளது. இயல்பாகக் கடல்நீரில் இருக்கும் உப்புத் தன்மையைவிட 8.6 மடங்கு உப்பு உள்ளது. இக்கடலின் நீளம் 67 கி.மீ. அகலம் 19 கீ.மீ. இதன் ஆழம் 377மீ. இக்கடலில் நாம் மிதக்கலாம். அந்த அளவிற்கு உப்பு மிகுந்து நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளது. |
![]() |