இகரம்
(இரண்டாம் பருவம்)
(இருபெரும் அறிவியல் அறிஞர்கள் சந்தித்துப் பேசுவதுபோல், கற்பனை உரையாடல்)
கலீலியோ கலீலி | : | ஜேம்ஸ்வாட். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. | |
ஜேம்ஸ்வாட் | : | வணக்கம். கலீலியோ, எனக்கும் மகிழ்ச்சிதான். | |
கலீலியோ கலீலி | : | நீங்கள் நீராவி இயந்திரத்தின் மூலம் தொழிற்புரட்சியையே ஏற்படுத்தி விட்டீர்கள். | |
ஜேம்ஸ்வாட் | : | அப்படியொன்றுமில்லை. தாமஸ் நியூகோமனின் நீராவி இயந்திரத்தில் சில மாற்றங்களைச் செய்தேன். | |
கலீலியோ கலீலி | : | என்ன மாற்றங்களைச் செய்தீர்கள்? | |
ஜேம்ஸ்வாட் | : | சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், உந்து தண்டினை (piston) மேலும் கீழும் சுழழும் (rotory) முறையையும் உருவாக்கினேன். அந்த மாற்றங்களால் இயந்திரத்தின் ஆற்றல் பலமடங்கு பெருகியது. இதனால் நீராவி இயந்திரத்தின் தேவை அதிகரித்தது. | ![]() |
கலீலியோ கலீலி | : | அருமை, அருமை. | |
ஜேம்ஸ்வாட் | : | ஆமாம், உங்களுடைய கண்டுபிடிப்பைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். | |
கலீலியோ கலீலி | : | என்னுடைய சிறுவயதில் ஓர் அனுபவம் ஏற்பட்டது. அந்த அனுபவம்தான் ஊசல் கடிகாரம் கண்டுபிடிக்கத் தூண்டியது. | |
ஜேம்ஸ்வாட் | : | அப்படியா? அதைப்பற்றிச் சொல்லுங்கள். | |
கலீலியோ கலீலி | : | மாதா கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே கண்ணாடியால் ஆன விளக்குகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை காற்று வீசும்போது இப்படியும் அப்படியும் அசைந்தன. இடப்பக்கம், வலப்பக்கம் சென்று வர எத்தனை மணித்துளி ஆகிறது எனக் கணக்கிட்டேன். இரண்டுக்கும் ஒரே நேரம் ஆனது. | ![]() |
ஜேம்ஸ்வாட் | : | நேரத்தை எப்படிக் கணக்கிட்டீர்கள்? உங்கள் காலத்தில்தான் கடிகாரம் இல்லையே? | |
கலீலியோ கலீலி | : | ஆமாம். ஆனால், என்னுடைய நாடித் துடிப்பைக் கொண்டு, இருபக்கமும் விளக்கு சென்றுவரும் நேரத்தைக் குறித்துக்கொண்டேன். | |
ஜேம்ஸ்வாட் | : | நீங்கள் வேறு என்ன கண்டுபிடித்தீர்கள்? | |
கலீலியோ கலீலி | : | வானத்தைப் பார்ப்பதற்காகத் தொலைநோக்கி (Telescope) கண்டறிந்தேன். உடலின் வெப்பத்தை அறிந்துகொள்ள, வெப்பமானியைக் கண்டுபிடித்தேன். | |
![]() |
|||
ஜேம்ஸ்வாட் | : | நமிகச் சிறப்பு. புதிய கண்டுபிடிப்புகள் நமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. நன்றி. நாம் மீண்டும் சந்திப்போம். |
1. | நீராவி இயந்திரம் | - | நீராவியில் உள்ள வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி எந்திர ஆற்றலாக மாற்றும் கருவியாகும். |
2. | தொலைநோக்கி | - | தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவி. |
ஜேம்ஸ்வாட்
வாட், நீராவி இயந்திரத்தில் சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், உந்துதண்டினை (piston) மேலும் கீழும் சுழழும் (rotory) முறையையும் மாற்றம் செய்தார்.
ஊசல் கடிகாரம், தொலைநோக்கி, வெப்பமானி ஆகியவை கலீலியோவின் கண்டுபிடிப்புகள் ஆகும்.
ஊசல் கடிகாரம் தொங்கும் விளக்கை அடிப்படையாகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
உடலின் வெப்பத்தை அறிந்துகொள்ள வெப்பமானி பயன்படுகிறது.