இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.3 பாடி மகிழ்வோம்

ஓதுவது ஒழியேல்

பள்ளிக் கூடம் சென்றங்கே

படித்தால் போதும் என்றெண்ணித்

துள்ளி ஓடி விளையாட்டே

துணையாய்க் காலம் போக்காதே.

மாலைப் போதில் விளையாடு

மற்றப் போதில் அறிவுதரும்

நூலைத் தேர்ந்து படித்திடுவாய்

நோயாம் மடமை போக்கிடுவாய்.

பள்ளிப் பருவம் சென்றபினும்

படிக்கும் பழக்கம் நிறுத்தாதே

வெள்ளக் கடல்போல் விரிந்திருக்கும்

வித்தை நூல்கள் பலகற்பாய்.

- நாரா நாச்சியப்பன்