இகரம்
(இரண்டாம் பருவம்)
மணியும் முல்லையும் தம் பெற்றோருடன் மகிழுந்தில் பயணம் செய்தனர். செல்லும் வழியில் சிறிய அருவி ஒன்று இருப்பதை அறிந்தனர். ஆகையால், அந்த அருவியைக் காண விரும்பினர். ஆனால், அவர்கள் செல்லும் வழி சற்றுக் கரடுமுரடாக இருந்தது. மேலும், சுற்றிலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்து இருந்தன. மகிழுந்திலிருந்து இறங்கிச் சற்றுத் தொலைவு நடந்தே சென்றனர். அங்கு மலையிலிருந்து அருவி நீர் ஆர்ப்பரித்துப் பாறைகளின் மீது பட்டுத் தெறித்தது. மணியும் முல்லையும் பெற்றோரின் மேற்பார்வையில் அருவியில் குளித்து மகிழ்ந்தார்கள். இதனால் நேரம் போனதே தெரியவில்லை. அங்கு ஏற்கெனவே இருந்தவர்களும் வெளியேறத் தொடங்கிவிட்டனர். மாலை நேரம் முடிந்து, இருள் பரவத் தொடங்கியது. பெற்றோர் மணியையும் முல்லையையும் அழைத்துக்கொண்டு விரைவாக மகிழுந்தை நோக்கி நடந்தனர். மகிழுந்தில் ஏறி அமர்ந்தனர். மரங்கள் அடர்ந்து இருந்ததால், வந்த பாதையைக் கண்டறிய முடியவில்லை. அப்போது மணியின் அப்பா, சட்டெனக் கூகுள் வரைபடத்தின் உதவியை நாடினார். ஒருவழியாக அந்த இடத்தைவிட்டு, நால்வரும் வெளியேறினர். அஃது அவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
மகிழுந்து
அருவிக்குச் செல்லும் வழி சற்றுக் கரடுமுரடாக இருந்தது.
அருவி இருக்கும் பகுதி மரம், செடி, கொடிகள் என அடர்ந்து இருந்தது.
மணியின் அப்பா, வந்த பாதையைக் கண்டறிய கூகுள் வரைபடத்தைத் தேர்ந்தெடுத்தார்.
இரவு நேரங்களில் நாம் தனித்துச் செல்லும்போது கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.