இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.8 செந்தமிழ்ச்செல்வம்

மூதுரை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

(பாடல் – 8)

- ஔவையார்

(நல்லார் – நல்ல பண்பு உடையவர்; காண்பது - பார்ப்பது; இணங்கி – மனம் ஒத்து)

பொருள் :

நல்ல பண்பு உடையவர்களைக் காண்பதும் நல்லது. அவர்தம் பயன் நிறைந்த சொல்லை கேட்பதும் நல்லது. அவர்தம் பண்புகளைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவதும் நல்லது. அவரோடு நட்பாகச் சேர்ந்திருப்பதும் நல்லது.