இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.2 படிப்போம்

கணினி

அறிவியல் கண்டுபிடிப்புகள் புதுமையின் அடையாளம். அறிவியலின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு, கணினி. 1843இல் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர், கணிதச் செயல்பாட்டுக்காகப் புதிய கருவியை வடிவமைத்தார். இதுவே கணினி தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. அதனால், இவரைக் ‘கணினியின் தந்தை‘ என்று போற்றினர். முதன்முதலில் உருவாக்கப்பட்ட கணினி அளவிலும் உருவத்திலும் மிகப் பெரியதாக இருந்தது. பல தலைமுறைக்குப் பின்னரே இன்று கையடக்கக் கணினியாக வளர்ச்சி பெற்றுள்ளது. கணினியில் மேசைக் கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி எனப் பல வகைகள் உள்ளன. அன்றாட வாழ்வில் கணினி மிகவும் பயன்படுகிறது. கணினியுடன் இணையத்தை இணைத்ததால், உடனுக்குடன் பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வை உடனுக்குடன் பார்க்கவும் முடிகிறது. கல்வித்துறையில் கணினிவழிக் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் பலரையும் ஒருங்கிணைக்கிறது. கற்றல் கற்பித்தலை எளிதாக்குகிறது.

பொருள் அறிவோம்

1. இணையம் - தகவல் வலையம்
2. வலுவூட்டுதல் - வலிமை பெறச் செய்தல்

விடை காண்போம்

கணினி

சார்லஸ் பாபேஜ்

கணிதச் செயல்பாட்டுக்கு

அன்றாட வாழ்வில் கணினி மிகவும் பயன்படுகிறது. கணினியுடன் இணையத்தை இணைத்ததால், உடனுக்குடன் பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வை உடனுக்குடன் பார்க்கவும் கணினி பயன்படுகிறது.

கணினியில் மேசைக் கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி எனப் பல வகைகள் உள்ளன.